Wednesday, November 10, 2010

அறிஞரும்...வெகுமதியும்

ஒரு சின்ன ஊருல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு..ஊர் மக்கள் அவர் மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க.அவர் சொன்னா எந்த செயலையும் ஊர் மக்கள் தட்டாம செய்தாங்க.இப்படியே அவருடைய காலம் போய்க்கிட்டிருந்தது.

அவருக்கு ஒரு சின்ன  மனக்குறை ரொம்ப நாளா இருந்தது.நம்மளோட அறிவு இந்த சின்ன கிராமத்துக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது, கொஞ்சம் வெளியே போய் வெளி உலகம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வந்து அதை இந்த கிராமத்து மக்களிடம் வந்து பகிர்ந்துகிடனும்ன்னு..

இந்த ஆசையை அவர் தன்னோட ஊர் மக்கள்கிட்ட சொல்லவும் ,அவங்களும் அதை ஆமோதிச்சு ..அவரை சந்தோஷமா அனுப்பி வச்சாங்க.

முதல்ல ஒரு ஊருக்கு போனார்..அங்குள்ள மக்களுக்கு இவரை பத்தி ஏற்கெனவே கொஞ்சம் தெரிஞ்சிருந்ததால இவர் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டமா வந்தாங்க...வந்ததோட மட்டும் இல்லாம பெட்டி பெட்டியா காணிக்கைகளும் நிறைய கொண்டுவந்தாங்க.அறிஞருக்கு ரொம்ப மகிழ்ச்சி...

கொஞ்ச நாள் அங்க தங்கிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார்.அங்கும் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.அந்த ஊர் மக்களும் பெட்டி பெட்டியா காணிக்கைகள் தந்து அவரை திக்குமுக்காட வச்சுட்டாங்க..இப்படியாக போன இடம் எல்லாம் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.நிறைய ஊருக்குப்போயிட்டு இறுதியா அந்த அறிஞர் தன்னோட சொந்த ஊருக்கு வந்தார்.

தன்னோட அனுபவங்களை தன் மக்கள் கூட பகிந்துகொள்ள ஆசைப்பட்டார்..அனைவரையும் ஒரு போது இடத்திற்கு வரச்சொன்னார்..

ஒவ்வொரு ஊருலேயும்  தனக்கு கிடைத்த மரியாதையையும் வெகுமதிகளையும் பற்றி சொன்னார்.ஊர்  மக்கள்  ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க..தனக்கு கிடைத்த வெகுமதிகளை தன்னை மதிக்கும் ஊர் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட்டார் அந்த அறிஞர்..

பெட்டிகளை எல்லோர் முன்னிலையிலும் பிரிச்சாங்க..

உள்ளே பார்த்தா...
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.. 

பெட்டிக்குள்ள ஒரு பை இருந்தது..
அந்த பைக்குள்ள அத்தனையும் சின்ன சின்ன SYRUP(மருந்து)
பாட்டில்கள்..

                                யாருக்கும் எதுவும் புரியலை..
                           அந்த அறிஞரே மெதுவா சொன்னார்...

                                                               || ||

                                                               || ||
 
                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                              கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம்
                                சிறப்புன்னு [SYRUP] இதைத்தான்
                                              அந்த காலத்துல
                                    சொல்லியிருப்பாங்க  போல ..

ஒரு சின்ன ஊருல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு..ஊர் மக்கள் அவர் மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க.அவர் சொன்னா எந்த செயலையும் ஊர் மக்கள் தட்டாம செய்தாங்க.இப்படியே அவருடைய காலம் போய்க்கிட்டிருந்தது.

அவருக்கு ஒரு சின்ன  மனக்குறை ரொம்ப நாளா இருந்தது.நம்மளோட அறிவு இந்த சின்ன கிராமத்துக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது, கொஞ்சம் வெளியே போய் வெளி உலகம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வந்து அதை இந்த கிராமத்து மக்களிடம் வந்து பகிர்ந்துகிடனும்ன்னு..

இந்த ஆசையை அவர் தன்னோட ஊர் மக்கள்கிட்ட சொல்லவும் ,அவங்களும் அதை ஆமோதிச்சு ..அவரை சந்தோஷமா அனுப்பி வச்சாங்க.

முதல்ல ஒரு ஊருக்கு போனார்..அங்குள்ள மக்களுக்கு இவரை பத்தி ஏற்கெனவே கொஞ்சம் தெரிஞ்சிருந்ததால இவர் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டமா வந்தாங்க...வந்ததோட மட்டும் இல்லாம பெட்டி பெட்டியா காணிக்கைகளும் நிறைய கொண்டுவந்தாங்க.அறிஞருக்கு ரொம்ப மகிழ்ச்சி...

கொஞ்ச நாள் அங்க தங்கிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார்.அங்கும் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.அந்த ஊர் மக்களும் பெட்டி பெட்டியா காணிக்கைகள் தந்து அவரை திக்குமுக்காட வச்சுட்டாங்க..இப்படியாக போன இடம் எல்லாம் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.நிறைய ஊருக்குப்போயிட்டு இறுதியா அந்த அறிஞர் தன்னோட சொந்த ஊருக்கு வந்தார்.

தன்னோட அனுபவங்களை தன் மக்கள் கூட பகிந்துகொள்ள ஆசைப்பட்டார்..அனைவரையும் ஒரு போது இடத்திற்கு வரச்சொன்னார்..

ஒவ்வொரு ஊருலேயும்  தனக்கு கிடைத்த மரியாதையையும் வெகுமதிகளையும் பற்றி சொன்னார்.ஊர்  மக்கள்  ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க..தனக்கு கிடைத்த வெகுமதிகளை தன்னை மதிக்கும் ஊர் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட்டார் அந்த அறிஞர்..

பெட்டிகளை எல்லோர் முன்னிலையிலும் பிரிச்சாங்க..

உள்ளே பார்த்தா...
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.. 

பெட்டிக்குள்ள ஒரு பை இருந்தது..
அந்த பைக்குள்ள அத்தனையும் சின்ன சின்ன SYRUP
பாட்டில்கள்..

                                யாருக்கும் எதுவும் புரியலை..
                           அந்த அறிஞரே மெதுவா சொன்னார்...

                                                               ||

                                                               ||

Wednesday, November 3, 2010

கண்ணீர் அஞ்சலி

இப்போது கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கொடுமை தான் பெரும் பரபரப்பாக உள்ளது...
 
ஒரு பெண் குழந்தை மற்றும் அவளது தம்பியை இரண்டு மிருகங்கள் சேர்ந்து கொடுமையாக கொன்றுள்ளதுகள்..
 
இல்லை இப்போது எல்லாம் மிருகங்களை விட மனிதன்தான் மிக கொடூரமானவனாக மாறி விட்டான்.
மிருகங்கள் கூட உணவுக்காக அல்லது  தனக்கு ஆபத்து என்றால்  தான் இன்னொரு உயிரை கொல்லும்.. ஆனால் மனிதன் தான் தன் பேராசைக்கும், சுயநலத்துக்கும் கொலை செய்கிறான்..
 
அந்த பிஞ்சு உள்ளங்களை கொன்ற அந்த அரக்கனை மாதக்கணக்கில் வைத்து துண்டு துண்டாக சித்ரவதை செய்து வெட்டிக்கொன்றால் கூட பாவமில்லை என்றே ஆத்திரம் வருகிறது...
 
அந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்து கொல்ல கூட ஒருவனுக்கு மனம் வருகிறதா? என நினைக்கும்போது ஆத்திரமும் அழுகையும் தான் வருகிறது,.. அந்த நேரம் அந்த பிள்ளைகள் என்ன துடித்ததோ தெரியவில்லையே...
 
அந்த தாயின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை...
 
அந்த பிஞ்சு உள்ளங்கள் ஆத்மா சாந்தி அடையவும்... அந்த அரக்கர்கள் கடுமையான தண்டனை பெறவேண்டும் என்றும்  பிரார்த்திக்கிறேன்
 
பெற்றோர்களே... உங்களை தவிர வேறு யாரையும் நம்பி பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம்...