Wednesday, November 10, 2010

அறிஞரும்...வெகுமதியும்

ஒரு சின்ன ஊருல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு..ஊர் மக்கள் அவர் மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க.அவர் சொன்னா எந்த செயலையும் ஊர் மக்கள் தட்டாம செய்தாங்க.இப்படியே அவருடைய காலம் போய்க்கிட்டிருந்தது.

அவருக்கு ஒரு சின்ன  மனக்குறை ரொம்ப நாளா இருந்தது.நம்மளோட அறிவு இந்த சின்ன கிராமத்துக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது, கொஞ்சம் வெளியே போய் வெளி உலகம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வந்து அதை இந்த கிராமத்து மக்களிடம் வந்து பகிர்ந்துகிடனும்ன்னு..

இந்த ஆசையை அவர் தன்னோட ஊர் மக்கள்கிட்ட சொல்லவும் ,அவங்களும் அதை ஆமோதிச்சு ..அவரை சந்தோஷமா அனுப்பி வச்சாங்க.


முதல்ல ஒரு ஊருக்கு போனார்..அங்குள்ள மக்களுக்கு இவரை பத்தி ஏற்கெனவே கொஞ்சம் தெரிஞ்சிருந்ததால இவர் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டமா வந்தாங்க...வந்ததோட மட்டும் இல்லாம பெட்டி பெட்டியா காணிக்கைகளும் நிறைய கொண்டுவந்தாங்க.அறிஞருக்கு ரொம்ப மகிழ்ச்சி...


கொஞ்ச நாள் அங்க தங்கிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார்.அங்கும் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.அந்த ஊர் மக்களும் பெட்டி பெட்டியா காணிக்கைகள் தந்து அவரை திக்குமுக்காட வச்சுட்டாங்க..இப்படியாக போன இடம் எல்லாம் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.நிறைய ஊருக்குப்போயிட்டு இறுதியா அந்த அறிஞர் தன்னோட சொந்த ஊருக்கு வந்தார்.

தன்னோட அனுபவங்களை தன் மக்கள் கூட பகிந்துகொள்ள ஆசைப்பட்டார்..அனைவரையும் ஒரு போது இடத்திற்கு வரச்சொன்னார்..


ஒவ்வொரு ஊருலேயும்  தனக்கு கிடைத்த மரியாதையையும் வெகுமதிகளையும் பற்றி சொன்னார்.ஊர்  மக்கள்  ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க..தனக்கு கிடைத்த வெகுமதிகளை தன்னை மதிக்கும் ஊர் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட்டார் அந்த அறிஞர்..


பெட்டிகளை எல்லோர் முன்னிலையிலும் பிரிச்சாங்க..

 

உள்ளே பார்த்தா...
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.. 

பெட்டிக்குள்ள ஒரு பை இருந்தது..
அந்த பைக்குள்ள அத்தனையும் சின்ன சின்ன SYRUP(மருந்து)
பாட்டில்கள்..





                                யாருக்கும் எதுவும் புரியலை..
                           அந்த அறிஞரே மெதுவா சொன்னார்...


                                                               || ||

                                                               || ||
 
                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               || ||

                                                               

                              கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம்
                                சிறப்புன்னு [SYRUP] இதைத்தான்
                                              அந்த காலத்துல
                                    சொல்லியிருப்பாங்க  போல ..


ஒரு சின்ன ஊருல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு..ஊர் மக்கள் அவர் மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க.அவர் சொன்னா எந்த செயலையும் ஊர் மக்கள் தட்டாம செய்தாங்க.இப்படியே அவருடைய காலம் போய்க்கிட்டிருந்தது.

அவருக்கு ஒரு சின்ன  மனக்குறை ரொம்ப நாளா இருந்தது.நம்மளோட அறிவு இந்த சின்ன கிராமத்துக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது, கொஞ்சம் வெளியே போய் வெளி உலகம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வந்து அதை இந்த கிராமத்து மக்களிடம் வந்து பகிர்ந்துகிடனும்ன்னு..

இந்த ஆசையை அவர் தன்னோட ஊர் மக்கள்கிட்ட சொல்லவும் ,அவங்களும் அதை ஆமோதிச்சு ..அவரை சந்தோஷமா அனுப்பி வச்சாங்க.


முதல்ல ஒரு ஊருக்கு போனார்..அங்குள்ள மக்களுக்கு இவரை பத்தி ஏற்கெனவே கொஞ்சம் தெரிஞ்சிருந்ததால இவர் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டமா வந்தாங்க...வந்ததோட மட்டும் இல்லாம பெட்டி பெட்டியா காணிக்கைகளும் நிறைய கொண்டுவந்தாங்க.அறிஞருக்கு ரொம்ப மகிழ்ச்சி...


கொஞ்ச நாள் அங்க தங்கிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார்.அங்கும் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.அந்த ஊர் மக்களும் பெட்டி பெட்டியா காணிக்கைகள் தந்து அவரை திக்குமுக்காட வச்சுட்டாங்க..இப்படியாக போன இடம் எல்லாம் இவருக்கு நல்லா வரவேற்பு இருந்தது.நிறைய ஊருக்குப்போயிட்டு இறுதியா அந்த அறிஞர் தன்னோட சொந்த ஊருக்கு வந்தார்.

தன்னோட அனுபவங்களை தன் மக்கள் கூட பகிந்துகொள்ள ஆசைப்பட்டார்..அனைவரையும் ஒரு போது இடத்திற்கு வரச்சொன்னார்..


ஒவ்வொரு ஊருலேயும்  தனக்கு கிடைத்த மரியாதையையும் வெகுமதிகளையும் பற்றி சொன்னார்.ஊர்  மக்கள்  ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க..தனக்கு கிடைத்த வெகுமதிகளை தன்னை மதிக்கும் ஊர் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட்டார் அந்த அறிஞர்..


பெட்டிகளை எல்லோர் முன்னிலையிலும் பிரிச்சாங்க..


உள்ளே பார்த்தா...
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.. 

பெட்டிக்குள்ள ஒரு பை இருந்தது..
அந்த பைக்குள்ள அத்தனையும் சின்ன சின்ன SYRUP
பாட்டில்கள்..





                                யாருக்கும் எதுவும் புரியலை..
                           அந்த அறிஞரே மெதுவா சொன்னார்...


                                                               ||

                                                               ||








Wednesday, November 3, 2010

கண்ணீர் அஞ்சலி

 

இப்போது கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கொடுமை தான் பெரும் பரபரப்பாக உள்ளது...
 
ஒரு பெண் குழந்தை மற்றும் அவளது தம்பியை இரண்டு மிருகங்கள் சேர்ந்து கொடுமையாக கொன்றுள்ளதுகள்..
 
இல்லை இப்போது எல்லாம் மிருகங்களை விட மனிதன்தான் மிக கொடூரமானவனாக மாறி விட்டான்.
மிருகங்கள் கூட உணவுக்காக அல்லது  தனக்கு ஆபத்து என்றால்  தான் இன்னொரு உயிரை கொல்லும்.. ஆனால் மனிதன் தான் தன் பேராசைக்கும், சுயநலத்துக்கும் கொலை செய்கிறான்..
 
அந்த பிஞ்சு உள்ளங்களை கொன்ற அந்த அரக்கனை மாதக்கணக்கில் வைத்து துண்டு துண்டாக சித்ரவதை செய்து வெட்டிக்கொன்றால் கூட பாவமில்லை என்றே ஆத்திரம் வருகிறது...
 
அந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்து கொல்ல கூட ஒருவனுக்கு மனம் வருகிறதா? என நினைக்கும்போது ஆத்திரமும் அழுகையும் தான் வருகிறது,.. அந்த நேரம் அந்த பிள்ளைகள் என்ன துடித்ததோ தெரியவில்லையே...
 
அந்த தாயின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை...
 
அந்த பிஞ்சு உள்ளங்கள் ஆத்மா சாந்தி அடையவும்... அந்த அரக்கர்கள் கடுமையான தண்டனை பெறவேண்டும் என்றும்  பிரார்த்திக்கிறேன்
 
பெற்றோர்களே... உங்களை தவிர வேறு யாரையும் நம்பி பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம்...

Friday, October 29, 2010

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ
முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

Thursday, October 21, 2010

கைபேசி நாகரீகத்தை பற்றி - இன்றைய திருக்குறள்


குறள் :
1:
நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.

பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.


2:
காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.

பொருளுரை: எங்கோ தொலைத்து விட்ட கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:
இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.


பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:
அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.

பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.
5:
தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.

பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:
வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:
இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

பொருளுரை: இறை இல்லமாகிய தேவாலத்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:
சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:
சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.

பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில்

Monday, October 18, 2010

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!

 

 ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள்
    காண்பது. நகைச்சுவையாக மட்டுமே பார்ப்பவர்கள் தொடரவும். மற்றவர்கள்
    வெளியேறிவிடலாம்

    (ஆக்கம் என்னுடையதல்ல! மின்னஞ்சலில் வந்தது.
    எழுதிய அன்பர் பெயர் தெரியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!)

    காதலிக்கு ஓர் கடிதம்!


    அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
    முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
    சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

    சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
    அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
    இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

    அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.
    கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
    திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
    யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
    அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    ‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

    “தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
    ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
    பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
    துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

    இப்படிக்கு,
    இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகி விடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
    முன்னாள் காதலன்.

Saturday, October 16, 2010

தங்க சுரங்கம்


 

இந்திய புவியியல் வல்லுனர்கள்..தங்களது தீவிர ஆராய்ச்சியின்
முடிவில் கேரளாவில் தங்கம் அதிக அளவில் இருப்பதாக
கண்டறிந்துள்ளார்கள்..
இதை NASA வும் உறுதிபடுத்தியிருப்பது
கூடுதல் செய்தி...
 



இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால்..
இந்த மாநிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தை
எடுக்க....




சுரங்கம் தோண்ட தேவையில்லை..
ஆள் பலம் தேவையில்லை...
பண பலம் தேவையில்லை..
அரசு அனுமதியும் தேவையில்லை..





தேவையான தகுதி ஒன்றே ஒன்றுதான்....
ஆணாக இருக்கவேண்டும்..


செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்..

Kerala Matrimonial
- ல் இன்றே உங்கள்
பெயரை பதிவு செய்திடுங்கள்...













அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது..

எந்திரன் vs அவதார்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண
படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலா பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.
இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய்
இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்
போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம்
உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர்
தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன்
பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும்
தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட
தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி
விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என
ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க
மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள்
ஒலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள்
என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு
போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம்
பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார்.
அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று
புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த
கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.

இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

Sunday, October 10, 2010

2020 ஒரு பார்வை

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.

தேதி : 04.9.2020

  ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
 ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.

 சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.

 இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

 எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.

 நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.

 வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.

 மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.
 "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.

 நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.

 காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.
 சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.

 சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

 இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.

 வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு
 ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.

 தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.

 பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.
 அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.

 டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.

Thursday, October 7, 2010

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!

ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை. மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருந்தார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தார். ஏற்கெனவே ஜெபத்தில் மூழ்கியிருந்த துறவிகளில் ஒருவர் ஜெபத்தை  முடித்து விட்டு வேறு ஒரு வேலைக்காக  ஆற்றின் மறுகரைக்குச் செல்லவேண்டியிருந்தது. எனவே அவர் ஆற்றுக்குள் இறங்கி விடுவிடென்று நடக்க ஆரம்பித்தார்.

அவருடன் செல்வதற்காக இன்னொரு துறவியும் நீருக்குள் இறங்கி முதலில் செல்லும் துறவியைப் பின்தொடர்ந்தார்.


இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளம் துறவிக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை. இவ்வளவு வேகமாக ஆற்றில் தண்ணீர் ஓடும்போது எப்படி படகின் உதவியில்லாமல் மறுகரைக்குச் செல்ல முடியும்? அதுவும் இவ்வளவு வேகமாக நடப்பதற்கு இதுவரை நேரம் செய்த ஜெபம் தான் உதவியிருக்கின்றது போல இருக்கின்றது. நானும் தானே ஜெபம் செய்தேன்; அவர்களால் ஆற்றுக்குள் இறங்கி நடக்க முடியுமென்றால், ஏன் என்னால் முடியாது? இவ்வாறு யோசித்து விட்டு, பின்விளைவுகளைப் பற்றிய சிந்தனை சிறிதுமின்றி வேகமாக ஓடும் தண்ணீரில் கால் வைத்ததும், ஆற்றின் எதிர்நீச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், அடித்துச் செல்லப்பட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு துறவி, அய்யயோ, ஆற்றுக்குள் எந்த இடங்களில் தடம் பதித்துச் செல்வதற்கேற்ற வகையில் கற்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், அவசரப்பட்டு இறந்து போய் விட்டானே என்று பரிதாபத்தில் கண்ணீர் விட்டார்.
எவ்வளவுதான் திறமையானவர்களாக  இருந்தாலும்,
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி சிந்திக்காத அறிவினால் எந்தப் பயனுமே இருக்காது.

Tuesday, October 5, 2010

'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது!


நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை  பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் 
வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்!

ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!) விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது.

தமிழ், தெலுங்கு  கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருதினை பசங்க படம் வென்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடுவுக்கு வழங்கப்பட்டது.

அதுவரை எல்லாமே சரியாகத்தான் நடந்தது. அதன் பிறகு நடந்ததுதான் அபத்தத்தின் உச்சம் என வர்ணிக்கப்படுகிறது திரையுலகில்.

ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபு தேவாவையும், அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நயன்தாராவையும் சிறந்த ஜோடியாகத் (தம்பதியாக - best couple award) தேர்ந்தெடுத்து விருது வழங்கியது இந்தப் பத்திரிகை.

இந்த இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது ஒரு புறமிருக்க, இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்தது கூட இல்லை என்பதுதான் இந்த விருதை கேலிக் கூத்தாக்கிவிட்டது.

விழாவுக்கு வந்திருந்த ஒரு இயக்குனர்  இப்படிக் கூறினார்: "சமூக நியதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் பத்திரிகைகள்தான் பெரிதாக கூப்பாடு போடுகின்றன. ஆனால் இன்றைக்கு அதே பத்திரிகையுலகம், சட்டவிரோத உறவுக்குள் வாழும் இருவருக்கு சிறந்த தம்பதி விருது கொடுக்கிறது. எல்லாம் விளம்பர ஸ்டன்ட் என்பதைத் தவிர இதை வேறு எப்படிச் சொல்வது...," என்றார் கடுப்புடன்.

Saturday, October 2, 2010

நன்றி...

ஹலோ சன் மியூசிக்?

ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு?

என் பேரு உண்மைதமிழன் மேடம்... 

சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????

மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்ல இருந்து பேசறேன் மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...

நன்றி... சொல்லுங்க உண்மைதமிழன் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க???

அது வந்துங்க மேடம்....

இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்..??? தைரியமா சொல்லுங்க...

என் அப்பன் முருகன் கிட்ட கேட்டேன் சொல்லாமா? இல்லையான்னு... அப்பன் முருகன் சொல்ல சொல்லிட்டான்...

தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது...மனசுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க உண்மைதமிழன்...


மேடம் நேத்து ஒரு பர்ஸ் கே கே நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல 15,000 பணம் இருந்துச்சி... அதுல கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்டு ஐடி கார்ட் எல்லாம் இருக்கு...அதுல இருக்கும் விலாசம்... பெருமாள்... நெம்பர்12, மாரியம்மன் கோவில் தெரு, வெஸ்ட் கேகேநகர், சென்னை 78.


உண்மைதமிழன் எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க... அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா?


இல்லைங்க மேடம்...


பின்ன????


பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்....

 "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு....." பாட்டை போடுங்க மேடம்.....

கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா... சொல்லுங்க...


 
இப்படி ஒரு கோணத்தில் யாரும் சிந்தித்துப் பார்த்ததே இல்லைனு நினைக்கிறேன்... மொழி அகராதியிலும் தேடிப்பார்த்தேன். இதற்கான விடை இல்லை. கொஞ்ச காலம் விழித்து விட்டு ஆண் நண்பர் குழுவிடமும், பெண் நண்பர் குழுவிடமும் தனித் தனியே இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றேன். நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றேன்.

பெண் நண்பர் குழு கூறிய விடை:
கம்ப்யூட்டர் ஆண்...
உதாரணங்கள்

* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, "பவர் ஆன்' செய்தல் வேண்டும்.

* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.

* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.

* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
 ஆண் நண்பர் குழு கூறிய விடை:
கம்ப்யூட்டர் பெண் ...
 காரணம்
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.

* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.

* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.

* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.

"இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு சொல்லுங்களேன்...

Tuesday, September 28, 2010

பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்..!



"குடும்பம் ஒரு கோயில்" என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த கேள்வியை எழுப்புகிறது தொடர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.

"தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல்துறையில் அதிகம் பதிவாகின்றன" என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த 'ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை'தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?!

நிபுணர்கள் தரும் பதில்கள்... நம் கேள்வியின் அவசியத்தையும், அதற்கான தீர்வின் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன.

சமூகநீதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக தளராது குரல் கொடுத்து வரும் பேராசிரியை சரசுவதி, "ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்குமே இதுவரை சமூகம் கடைபிடித்து வந்த கட்டமைப்பை மீறுவதற்கான நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்டன. சமூகத்திலும் முன்பு இருந்த இறுக்கம் சில விஷயங்களில் தளர்ந்திருக்கிறது. அதை எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள், எல்லை மீறி, குடும்பச் சூழலை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

'அவன், அதனால் இப்படிச் செய்தான்', 'இவள், இதனால் இந்த நிலைமைக்கு ஆளானாள்' என்று தனி நபர் பிரச்னையாகப் பார்க்காமல், பெருகிவரும் இந்த பொதுப் பிரச்னையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டியதும், அதிலிருந்து மீள்வதற்கு வழி காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பு" என்று வழிகாட்டினார்.

"பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்" என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஆன்மிக சொற்பொழிவாளர் 'நாகை' முகுந்தன்.

"பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் வருவதற்கு முன்பு தனிநபர் ஒழுக்கம் பெரிய விஷயமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று கடவுள் பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது.

ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்" என்று பிரச்னையின் அடிநாதத்தை தொட்டார் முகுந்தன்.

"ஒரு சமூகம் பொருளாதாரத்தில் பெரிய மாறுதல்களை அடையும்போது இந்த மாதிரியான சமூக சிக்கல்கள் உருவாகத்தான் செய்யும்" என்று நிதர்சனமாக ஆரம்பித்த 'மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, "கடந்த 10, 12 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய அளவிலிருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோதுகூட இத்தனை வளர்ச்சி இருந்ததில்லை. இம்மாதிரியான வளர்ச்சியில் பணப்புழக்கம் அதிகமிருக்கும்; நுகர்வுக் கலாசாரம் அதிகமாகும்; நகரமயமாதல் விரிவடையும்; பயணங்கள் அதிகரிக்கும். கூடவே இடம் பெயருவதும் அதிகரிக்கும்.

அதேசமயம்... ஓய்வு, நட்பு, குடும்பப் பிணைப்பு எல்லாமே குறைய ஆரம்பிக்கும். பிணைப்பு தளரும் சமூகத்தில் உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் வரும். முன்பு ஒரு சமூக அடையாளத்துடன் இயங்கி வந்தவர்கள், இன்று தனிநபர் அடையாளத்துடன் இயங்குவதும், குடும்பத்துடன் இல்லாமல் தனித்து வாழ்வதும் இம்மாதிரியான பிரச்னைகளை அள்ளித் தெளிக்கும்" என்று நடைமுறையை உடைத்துக் காட்டினார் வார்த்தைகளால்!

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தந்தார் டாக்டர் ஷாலினி.

"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறா மல் போக, அந்த எதிர் பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.

அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.

இம்மாதிரியான ஒரு சூழல் பிரிட்டனில் உருவாகிய போது அந்த அரசு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, கணவன்-மனைவி உறவும், அவர்களின் தாம்பத்ய வாழ்வும் திருப்தியாக இருக்க 'லவ்வர்ஸ் கைடு' என்ற வழி காட்டி புத்தகத்தையும், சி.டி-யையும் வெளியிட்டது!" என்று சொல்லி யோசிக்க வைத்தார்.

குடும்பத்தைக் கட்டிக் காப்பது கணவன், மனைவி கடமை. அதேபோல் குடும்ப அமைப்பு பெருமளவில் சிதையும்போது, ஜப்பான், பின்லாந்து, நார்வே, சிங்கப்பூர் நாடுகளைப் போல் இந்த குடும்ப அமைப்பை காப்பதற்கான வழி வகை செய்வது, அரசின் தார்மிகக் கடமை!

வாழ்க்கை இனிக்க பிராக்டிகல் வழிகள்...
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், ஆபீஸ் வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.

நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?
 

Monday, September 27, 2010

இதுதாண்டா மெகா சீரியல்


கிட்ட தட்ட இது ஒரு தொற்று வியாதி
எப்போதும் உங்களை ஒரு பரபரப்புலேயே வச்சிட்டு இருப்பாங்க...
எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் புரியும்,
பார்த்தா கண்டிப்பா  அழுகை வரணும்

பயங்கரமான ஒரு டர்னிங் பாயிண்ட்ல தொடரும் போட்டு உங்கள பிரசர் ஏத்துவாங்க.. நீங்களும் அதே பரபரப்புல இருந்துட்டு அடுத்த நாள் பார்க்கும் போது... அந்த டர்னிங் பாயிண்ட் ஒரு முட்டுச்சந்து மாதிரி புஸ்ஸுன்னு போய்டும்..( ஆனா இதுக்காக நீங்க உங்க வீட்டுல டென்சன் ஆகவே இருந்து இருந்து வீடே  ரணகளம் ஆயிருக்கும்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகள் உங்க வீட்ல நடந்ததா... இல்ல அந்த சீரியல்ல நடந்ததானு  உங்களுக்கே தெரியாது..

சினிமால கூட நீங்க பார்க்காத வில்லத்தனம் எல்லாம் இருக்கும்

எதுவுமே நம்புற மாதிரி இருக்காது... ஆனா நம்பித்தான் ஆகணும்

கிட்டத்தட்ட ஏதாவது ஒரு ஸீன் எல்லா சீரியல்லயும் வரும்...

முதல் தலைமுறையில் ஆரம்பிச்சு மூன்றாவது தலைமுறையில் முடியும். ஆனா அதுக்கப்புறமும் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் வேற பேருல...
ஆரம்பத்துல இருந்த கதைக்கும் முடிவுல இருந்த கதைக்கும் சம்பந்தமே இருக்காது, அதனால அடுத்த தலைமுறைக்கு  கதை புரியறதுல சிரமம் இருக்காது

பணக்கார வில்லன் / வில்லி  கெட்டவங்களாவும்   ஏழை ஹீரோயின் நல்லவளவும் இருப்பாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இருக்காது. அழுவதற்கென்றே சில கேரக்டர்ஸ் இருப்பாங்க..

பி.கு: இந்த மெகா சீரியல் பார்க்கிறதுல ஒரே ஒரு நன்மை என்னன்னா  நீங்க வாட்ச்சே பார்க்காம கரெக்டா டைம் சொல்லுவீங்க...

Monday, September 20, 2010

நித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது?


அன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்
மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).
ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.
இங்கு சாத்தானின் குணநலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதனை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.
அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறது, இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் அது என்னவெனில் ஆதியாகமம், 2;19 மற்றும் நீதிமொழிகள் 5;18-ன் படி, துணை என்பது ஒருமையே தவிர பன்மை கிடையாது, ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளும் சாத்தானின் திட்டமே ஆகும்,
அப்படியானால் துனையை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் வேதம் மிகத்தெளிவாக நமக்கு பதில் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7; 36 மற்றும் 7;39 ஆகிய வசனங்களின் படி துணையை இழந்தவர்கள் அதாவது துணை மரித்துப் போனவர்கள், தங்கள் பாலுணர்வின் நிமித்தம் தங்களைப் பரிசுத்தக் குறைவு அடையாமல் பாதுகாத்துக்கொள்ள விதவை மறுமணத்தை ஆதரிக்கிறது, மேலும் முக்கியமான ஒரு செய்தி என்னவெனில் துணை உயிரோடு இருக்கும் போது அவர்களை விட்டுவிடுதல் விபச்சாரக்குற்றம் (மத்தேயு 5;32) (ரோமர் 7.3), என்று பைபிள் சொல்லுகிறது.
கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா?
இப்போது உங்களுக்கு ஒரு தெளிவான ஒரு கேள்வி வந்திருக்கும் அதாவது கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா? என்று, இதற்கு பதில் மேலேயே சொல்லப்பட்டு விட்டது மேலும் இது பற்றி பைபிள் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது 1தீமோதேயு 4;2-ன் படி கடைசி காலங்களில் இயற்கைக்கு மாறாக சந்நியாசம் ஆதரிக்கப்படும், ஆகவே அதை யாரும் செய்யவேண்டாம் என்று, இன்னும் கூட கிறிஸ்தவத்திலும் இது போன்ற சந்நியாசங்கள் உண்டு. இதற்கும் மேற்சொன்ன வசனமே சாட்சி இது குறித்து பைபிள் சொல்லும்போது மீண்டும் நமக்கு ஒரு சாத்தானின் குண நலன் நமக்கு தெரியவருகிறது அது என்னவெனில் 2 கொரிந்தியர் 11;14- நமக்கு சொல்லப்பட்ட படி சாத்தான் நம்மை வஞ்சிக்க கடவுளின் தூதன் வேடத்தைக் கூட தரித்துக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றிவிடுவான் என்று ஆகவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது
எனக்கன்பான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒருவேளை சந்நியாசம் போன்ற போதனையில் சிக்குண்டு இருக்கலாம், கடவுள் கொடுத்த பரிசுத்தமான பாலுணர்வை உன் வாழ்க்கைத் துணையிடத்தில் கூட வெளிப்படுத்தாமல் இருந்தால் கடவுள் மிகவும் மகிழ்வார் என்று உனக்குச் சொல்லப் படலாம், அதேபோல துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய பாலுணர்வை மற்ற மனிதர்களோடும் பகிர்ந்து கொள்ளவும் நீ போதிக்கப் பட்டிருக்கலாம் இவைகள் இரண்டுமே இயற்கைக்கு விரோதமானது தான். இவைகள் இரண்டுமே சாத்தானால் கொண்டுவரப்பட்டிருக்கும் தந்திரங்கள் தான். ஆகவே இவைகளை விட்டு விலகு. கடவுள் உன்னை மேன்மைப் படுத்துவார். ஆமென்.