Thursday, January 6, 2011

மாமியாரும் மாட்டுப் பொண்ணும்

"விமலா மிகவும் சோகத்தில் இருந்தாள்"
உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள், அந்தத் தெரு மக்கள் அனைவரும் விமலாவின் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தார்கள் ..
அன்று காலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. விடியலில் பால் கறக்க சென்ற போது பசு மாடு உதைத்ததில் விமலாவின் மாமியார் இறந்து போயிருந்தார். அந்தப் பசு விமலா மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தது, அவள் கொஞ்சம கூட எதிர்பார்க்கவில்லை தான் வளர்த்த பசுவால் உதை பட்டுச் சாவார் என்று . .

திருமணமாகி வந்ததிலிருந்து விமலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்துப் போனதே இல்லை, எதற்கெடுத்தாலும் சண்டை தான், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் அல்ல, எந்த ஒரு விசயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவார்கள், எந்த வேலைகள் செய்தாலும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்வார்கள் ..

ஆனாலும் மாமியாரின் இழப்பு விமலாவை மிகவும் பாதித்திருந்தது, துக்கம் தொண்டையை அடைத்தாலும் அடக்கி கொண்டிருந்தாள் ..

எல்லாம் ஆகி விட்டது .. இன்னும் சிறிது நேரத்தில் அடக்கமாக போகிறார்கள் மாமியார் , அந்த சோக நிமிடங்களில் அவளுக்கு பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர், அனைவருக்கும் பதில் சொல்லி தலையாட்டிக் கொண்டிருந்தாள் விமலா ..

இதனை ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார் ..
திருமணமான இளவயதுப் பெண்களிடம் இல்லை என்றும் .. முதிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் சரி என்றும் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .. தூரத்தில் நிற்று கொண்டிருந்த பெரியவரை இது மிகவும் குழப்பியது ..

துக்கம் விசாரிப்பதில் கூடவா வயது வித்தியாசம் இருக்கும் என நினைத்து போய் அவளிடமே கேட்டார் ..
அதற்கு விமலா..
ஆண்களும் வயதான பெண்களும் மனது கலங்காதே .. எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள் ..
இளவயது திருமணமான பெண்கள் அந்தப் பசுமாடு விலைக்குக் கிடைக்குமா என்று கேட்டார்கள் ..!!!!

"என்ன கொடுமை சார் இது"
சரி.. சரி..
உங்க மனசுல இருக்கிறதை மறைக்காம சொல்லிட்டுப் போங்க..

4 comments:

  1. செம காமெடி..

    மாமியார் மருமகள்களை வைத்துதான் எத்தனை காமெடி..

    அட என்ஜின் ஆயில் விளம்பரத்துக் கூட இப்போ இந்த சப்ஜெக்டை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்..

    ReplyDelete
  2. இதுக்கப்புறம் அந்த பசு எதுக்குங்க... வேற யாருக்காவது குடுக்க வேண்டியது தானெ!!!.. சமூக சேவை

    ReplyDelete
  3. விமலாவ பார்த்தா சொல்றேங்க மிஸ்டர் முஹமது..

    ReplyDelete