Monday, August 30, 2010

உஷ்....சத்தம் போடாதே....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ன்னு சோம்பல் முறித்து...

ஸ்ஸ்..ஸ்ஸப்பான்னு உச்சா போயிட்டு...

கர்ச்ச்..கர்ச்ச்..க்ரிச்..கிரிச்ன்னு பல் விளக்கிட்டு...

கொப்..கொப்..கொப்ப்ப்..கொப்..கொப்..கொப்புன்னு...வாய் கொப்பளித்து...

ஃப்பூ..ஸ்ஸ்..ப்பூ...ஊதிட்டே காபி குடிச்சுட்டு...

மீண்டும் ம்ம்ம்ம்ன்னு முக்கி முனகி டாய்லெட் போயிட்டு...

ஃப்பு..ஃப்பு..ன்ன்னு தலைக்கு குளிக்கும்பொழுது வாய்ல விழும் தண்ணிய ஊதிட்டு...

ப்ச்தா...ப்ச்தா...ன்னு நீயூஸ் பேப்பர் எச்சில் தொட்டு புரட்டிட்டு...

ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்,,ஊதிட்டே சூடான இட்லி சாப்ட்டுட்டு...

க்டக்...க்டக்...க்டக்ன்னு தண்ணி குடிச்சுட்டு

ஏவ்வ்வ்..ஏவ்வ்வ்வ்ன்னு..ஏப்பம் விட்டுட்டு...

ப்ப்..ன்னு கண்ணாடி முன்னாடி வாய மூடி சீவிட்டு...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ன்னு சிகரெட் புகை உள்ளிழுத்து

ஃப்ப்ப்பூ...ன்னு புகைய வெளிய விட்டு

லொக்..லொக்..ன்னு இருமிட்டு...

ஹ..ஹ..ஹ..ன்னு மூச்சு விட்டு ஓடி பஸ் பிடிச்சு

அப்பாடான்னு...இடம் கிடைச்சு...

நற நற..நறன்னு சில்லரை கொடுக்காத கண்டக்டரை முறைச்சுட்டு...

ம்ஹும்..ம்ஹும்..சீன்னு...சாக்கடை நாத்தம் பார்த்து...

அச்..அச்..ன்னு தூசினால தும்மிட்டு...

ஹ ஹ ஹான்னு நண்பர் பார்த்து சிரிச்சுட்டு..

ப்ச்..ப்ச்ன்னு..பிச்சையெடுக்கும் சிறுமி பார்த்து...

லலலா லலலான்னு...ஹம்மிங்க் பாடிட்டு வீடு திரும்பி

ஸ்ஸ்ஸ் அம்மாடின்னு ஹாயா சோஃபால உக்கார்ந்துட்டு...

திரும்பவும்...சொட்டாய்ங்...போட்டு சாப்ட்டுட்டு...

ப்ச்ன்னு..தூங்கிட்டு இருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துட்டு...

ஆவ்வ்வ்ன்னு...கொட்டாவி விட்டுட்டு...

கொர்ர்..கொர்ர்...ன்னு குரட்டை விட்டு தூங்கிப்போனேன்..(இத்தோட நிப்பாட்டிக்கலாம்)

மீண்டும்..காலையில..ம்ம்ம்ம்ம்ன்னு ஆரம்பிக்கிறது இந்த மொழியில்லா சத்தங்களுடன் வாழ்க்கை......

(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்)

புதுக்குறள் - 10

வேறுஒரு ப்ளாக் கில் சுட்டது .... தேங்க்ஸ் டு வசந்த்
 
பணமிலார் எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...



அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...



முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...



மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...



கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...



குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக...



மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...



சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...



தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...



காதல் இனிது கவிதை இனிது என்னும் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...

Saturday, August 28, 2010

அமிதாப் பச்சனா, ரஜினியா பிரபலம்?

ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அமிதாப் பச்சனுக்கும் சின்ன வாக்குவாதம், யாருக்கு செல்வாக்கு அதிகம்னு.
தலைவர் சொன்னாரு, " அமிதாப் நீ யார வேணும்னாலு சொல்லு, அவங்களுக்கு என்னைக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், ".
"
சும்மா உதார் வுடாதீங்க ரஜினி அது எப்படி உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ?"
"
நீங்க சொல்லுங்க அமிதாப்..."
"
சரி ரஜினி, உங்க வழிக்கே வர்றேன்....உங்களுக்கு "TOM CRUISE" தெரியுமா ?"
"
ஓ நல்லா தெரியுமே அவரும் நானும் ஓல்ட் friends-மா...."
உடனே ரஜினி அமிதாப்பை டாம் வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.
ரஜினி வர்றதா பாக்குற டாம், டக்குனு சந்தோசமா "தலைவா வாங்க, இன்னக்கி நீங்க என்கூடதான் சாப்பிடனும், கூட friends வேற வந்திருக்காங்க" னு சொல்றார்.
எல்லாம் முடிஞ்சு திரும்பும்போது,
இத பாத்தும் திருப்தி அடையாத அமிதாப், "இது ஒருவேளை லக்-ஆ இருக்கலாம்"
ரஜினி " அப்ப இன்னொருத்தர் பேரு சொல்லுங்க".
"
சரி இந்த முறை பார்ப்போம், எங்க உங்களுக்கு ஒபாமா தெரியுமா?"
ஒரு நிமிஷம் யோசிச்ச ரஜினி உடனே நல்லா தெரியுமே-னு சொல்றார்.
ரெண்டு பேரும் இப்ப கிளம்பி வெள்ளை மாளிகைக்கு போறாங்க.
அவசரமா ஒரு மீடிங்க்கு போற ஒபாமா ரஜினிய பார்த்த உடனே, நண்பான்னு கத்திக்கிட்டே ஓடி வர்றார்.ஒபாமா பக்கத்துல நின்ன வெள்ளக்காரன்கிட்ட டே இன்னக்கி எல்லாத்தையும் கான்செல் பண்ணிடு , " I need to spend time with Rajni". னு சொல்றார். உடனே சடாரென , அமிதாப்பை பார்த்து , "ரஜினி ஜி ,இது யாரு உங்க அங்கில்-??" என்று கேட்கிறார் .
இத பார்த்து அமிதாப் ஒரு நிமிஷம் ஆடி போயிடுறார்,
அப்பவும் அவரு மனசு அதை ஒத்துக்கிடலை...
ரஜினி " சரி அமிதாப் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தர்றேன், நல்லா யோசிச்சு ஒரு பேர் சொல்லுங்க"
கொஞ்சம் நேரம் கழிச்சு....
அமிதாப் " இப்ப பார்ப்போம், உங்களுக்கு போப் தெரியுமா ?"
ரஜினி கொஞ்சம் கூட அசராம , " வாங்க வாடிகன் போகலாம்".
வாடிகன் சர்ச் வாசல்ல ஒரே கூட்டமா இருக்கு, உடனே தலைவர் "அமிதாப் நீங்க இங்கே இருங்க, எனக்கு இங்க இருக்க செக்யூரிட்டி எல்லாம் நல்லா தெரியும், அதனால நான் மட்டும் உள்ள போறேன் , கொஞ்ச நேரங்கழிச்சு மேல பாருங்க பால்கனில நானும் போப்பும் ஒன்ன வந்து கை காமிக்குறோம்" - னு சொல்லி தலைவர் மட்டும் சர்ச் உள்ள போயிடுறார்.
கொஞ்சம் நேரம் கழிச்சு பால்கனில போப்போட வர்ற தலைவர் கீழ அமிதாப பாத்து கை காமிக்கிறார்.
இத பாக்குற அமிதாப் உடனே மயங்கி கீழ விழுந்திடுறார்.பதறிப்போய் ஓடி வர்ற ரஜினி , அமிதாப்பை எழுப்பி என்ன ஆச்சுன்னு கேக்க,
அமிதாப் " ரஜினி நீங்க போப்போட வந்ததால நான் மயங்கல, என் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலி நாட்டு வெள்ளக்காரன் ,நீங்க ரெண்டு பேரும் பால்கனில வர்றத பாத்து என்கிட்டே,
.
.
.
.
.
.
.
.
.
.
.
"
யாரு அது ரஜினி கூட வர்றதுன்னு கேட்டான்" !!!!!!!!
அதத்தான் என்னால தாங்கமுடியல..... !!!!


க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.
அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.
பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில்  ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.
பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! 


அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.
பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.
இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.
ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?
இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!
பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 8 அல்ல‌து 8:30க்குள்.

TN State board books are online in PDF

Dear All.....

Pls pass on this information to your friends / neighbors... whose children are studying in the State boards.
I think sometimes we are indirectly helping to someone like this.

Now the TN State board books are online in PDF and downloadable.

From Std 1 to Std 12. All subjects...

Really if u want to help anyone u can print this material & handover to some Poor people.


http://www.textbooksonline.tn.nic.in/  

நீதிமன்றத்தில் நித்தியானந்தா

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்
 ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.
 என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.
 செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?
 நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?  
எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??
 இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.
 

நான் கல்வியமைச்சரானால் .....!!

+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும் !  

1.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது ?

(
) தமிழ் ( ) துளு ( ) பாரசீகம்

2.
கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(
). முதுமக்கள் தாழி எனப்படுவது யாது ?

2(
). அண்மையில் தனுஷ் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான , மூன்றெழுத்துத் திரைப்படம் எது ?

(i)
மெட்டி
(ii)
சட்டி
(iii)
பெட்டி
(iv)
குட்டி

3.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது ?

(
) புல் வெட்டுவது
(
) பஞ்சர் ஒட்டுவது
(
) ஊதுபத்தி விற்பது
(
) கவிதை எழுதுவது

4.
திருக்குறளில் அறத்துப்பால் , பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது ?

(
) இன்பத்துப்பால்
(
) மசாலா பால்
(
) ஆவின் பால்

5.
முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால் ! ( தோராயமாகச் சொல்லவும் )

6.
கடியாரத்தில் பெரிய முள் 12- லும் சிறிய முள் 5- லும் இருந்தால் எத்தனை மணி ? (4- க்கும் 6- க்கும் இடைப்பட்ட எண் )

7.
ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை ?

8.
தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம் ?

(
) வட இந்தியர்கள்
(
) பஜ்ஜி இந்தியர்கள்
(
) போண்டா இந்தியர்கள்

9.
எது பல்குத்த உதவும் ?
(
) துரும்பு ( ) கரும்பு ( ) இரும்பு

10.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது ?
(
) மன்னார்குடி ( ) மாமண்டூர் ( ) மதுரை

11.
ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார் ?

12.
உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன ?

13.
இந்தியாவின் தேசியப்பறவை எது ?

(
) மயில் ( ) காக்காய் ( ) இரண்டும் இல்லை

14.
புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா ? முடியாதா ?

(
) முடியும் ( ) முடியாது

15.
பதினான்கு தளங்கள் கொண்ட எல் . . சி . கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது ?

16.
ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும் ?

(
) கரடி ( ) காண்டாமிருகம் ( ) ஆடு

17.
கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது ?

(
) துவரங்குறிச்சி
(
) ஆழ்வார்குறிச்சி
(
) கல்லிடைக்குறிச்சி

18.
உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால் , மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் ?

19. BBC (British Broadcasting Corporation)
என்பதன் விரிவாக்கம் என்ன ?

20.
உங்களது முழுப்பெயரை எழுதுக ( எழுத்துப்பிழை தவிர்க்கவும் )

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!