Saturday, August 28, 2010

நான் கல்வியமைச்சரானால் .....!!

+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும் !  

1.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது ?

(
அ ) தமிழ் ( ஆ ) துளு ( இ ) பாரசீகம்

2.
கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(
அ ). முதுமக்கள் தாழி எனப்படுவது யாது ?

2(
ஆ ). அண்மையில் தனுஷ் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான , மூன்றெழுத்துத் திரைப்படம் எது ?

(i)
மெட்டி
(ii)
சட்டி
(iii)
பெட்டி
(iv)
குட்டி

3.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது ?

(
அ ) புல் வெட்டுவது
(
ஆ ) பஞ்சர் ஒட்டுவது
(
இ ) ஊதுபத்தி விற்பது
(
ஈ ) கவிதை எழுதுவது

4.
திருக்குறளில் அறத்துப்பால் , பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது ?

(
அ ) இன்பத்துப்பால்
(
ஆ ) மசாலா பால்
(
இ ) ஆவின் பால்

5.
முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால் ! ( தோராயமாகச் சொல்லவும் )

6.
கடியாரத்தில் பெரிய முள் 12- லும் சிறிய முள் 5- லும் இருந்தால் எத்தனை மணி ? (4- க்கும் 6- க்கும் இடைப்பட்ட எண் )

7.
ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை ?

8.
தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம் ?

(
அ ) வட இந்தியர்கள்
(
ஆ ) பஜ்ஜி இந்தியர்கள்
(
இ ) போண்டா இந்தியர்கள்

9.
எது பல்குத்த உதவும் ?
(
அ ) துரும்பு ( ஆ ) கரும்பு ( இ ) இரும்பு

10.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது ?
(
அ ) மன்னார்குடி ( ஆ ) மாமண்டூர் ( இ ) மதுரை

11.
ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார் ?

12.
உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன ?

13.
இந்தியாவின் தேசியப்பறவை எது ?

(
அ ) மயில் ( ஆ ) காக்காய் ( இ ) இரண்டும் இல்லை

14.
புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா ? முடியாதா ?

(
அ ) முடியும் ( ஆ ) முடியாது

15.
பதினான்கு தளங்கள் கொண்ட எல் . ஐ . சி . கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது ?

16.
ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும் ?

(
அ ) கரடி ( ஆ ) காண்டாமிருகம் ( இ ) ஆடு

17.
கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது ?

(
அ ) துவரங்குறிச்சி
(
ஆ ) ஆழ்வார்குறிச்சி
(
இ ) கல்லிடைக்குறிச்சி

18.
உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால் , மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் ?

19. BBC (British Broadcasting Corporation)
என்பதன் விரிவாக்கம் என்ன ?

20.
உங்களது முழுப்பெயரை எழுதுக ( எழுத்துப்பிழை தவிர்க்கவும் )

1 comment:

  1. எப்படிங்க இப்படியெல்லாம் .. செம செம ..!!
    கோமாளிய விட நல்லா காமெடி பண்ணுறீங்க ..
    எல்லா கேள்வியுமே செமையா சிரிக்க முடிஞ்சது..!!

    ReplyDelete