மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை.
குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.
தேதி : 04.9.2020
ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.
சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.
நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.
வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.
"கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.
நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.
காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.
சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.
இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.
வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு
ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.
தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.
பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.
அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.
டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.
No comments:
Post a Comment