குறள் : 1: நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும். 2: காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும். பொருளுரை: எங்கோ தொலைத்து விட்ட கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும். 3: இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை மெலிதே கொல்லும் செவி. பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்? 4: அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில் இன்மை அது கைபேசி உரை. பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும். 5: தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை செவிட்டுக்கு வழி செயின். பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே. 6: வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ காட்டும் கைபேசிச் சினம்? பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும். 7: இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை. பொருளுரை: இறை இல்லமாகிய தேவாலத்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும். 8: சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு. பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும். 9: சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள் பங்கமிட்டே இரைவதா பண்பு? பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்? 10: சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல் நிந்தையை நல்கும் அல்ல பிற. பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் |
Thursday, October 21, 2010
கைபேசி நாகரீகத்தை பற்றி - இன்றைய திருக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பர்... ஒரே ஒரு குரல் தான் எதிர்பார்த்தேன்... நீங்கள் ஒரு அதிகாரத்தையே எழுதிவிட்டீர்கள்..
ReplyDeleteஅருமை...அட்டகாசம்...வாழ்த்துகள்
ReplyDeleteகுரல் படிச்ச மார்க் போடுவேன்னு சொன்னா போது படிக்கரக்கு பிடிக்கல ..
ReplyDeleteஆனா இப்ப படிக்கரக்கு பிடிக்குது .. நல்லா இருக்குதுங்க ..!!
//ஓட்டலில்
ReplyDeleteஇன்மை அது கைபேசி உரை.//
நான் இதைய ஹோட்டல்னு நினைச்சு படிச்சிட்டேன் .. ஹி ஹி ஹி ..
அடேங்கப்பா
ReplyDeleteஅட்டகாசம்... உங்க creativityக்கு அளவேயில்லை, அசத்திட்டீங்க...
ReplyDelete