இப்படி ஒரு கோணத்தில் யாரும் சிந்தித்துப் பார்த்ததே இல்லைனு நினைக்கிறேன்... மொழி அகராதியிலும் தேடிப்பார்த்தேன். இதற்கான விடை இல்லை. கொஞ்ச காலம் விழித்து விட்டு ஆண் நண்பர் குழுவிடமும், பெண் நண்பர் குழுவிடமும் தனித் தனியே இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றேன். நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றேன்.
பெண் நண்பர் குழு கூறிய விடை:
கம்ப்யூட்டர் ஆண்...
உதாரணங்கள்
* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, "பவர் ஆன்' செய்தல் வேண்டும்.
* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.
* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.
* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
ஆண் நண்பர் குழு கூறிய விடை:
கம்ப்யூட்டர் பெண் ...
காரணம்
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.
"இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு சொல்லுங்களேன்...
No comments:
Post a Comment