Monday, October 18, 2010

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!

 

 ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள்
    காண்பது. நகைச்சுவையாக மட்டுமே பார்ப்பவர்கள் தொடரவும். மற்றவர்கள்
    வெளியேறிவிடலாம்

    (ஆக்கம் என்னுடையதல்ல! மின்னஞ்சலில் வந்தது.
    எழுதிய அன்பர் பெயர் தெரியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!)

    காதலிக்கு ஓர் கடிதம்!


    அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
    முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
    சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

    சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
    அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
    இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

    அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.
    கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
    திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
    யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
    அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    ‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

    “தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
    ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
    பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
    துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

    இப்படிக்கு,
    இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகி விடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
    முன்னாள் காதலன்.

21 comments:

  1. கோயமுத்தூர்ல எடுத்த ஓட்டம் பின்கால் பிடரியில்பட ஓடினார் என்று கேள்வி ...

    ReplyDelete
  2. கே.ஆர்.பி யின் பின்(ஊக்கம்)னுடதிற்கு நன்றி

    ReplyDelete
  3. // மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.//

    செம காமெடிங்க ..!! சிரிப்பஅடக்க முடியல ..

    ReplyDelete
  4. //வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…//

    ஐயோ ., எப்படிங்க இப்படியெல்லாம் .. உண்மைலேயே என்னால சிரிப்ப அடக்கவே முடியல ..!!

    ReplyDelete
  5. திரு. செல்வக்குமார் அவர்களே..தொடர்ந்து பழகுங்கள்.. நன்றி..

    ReplyDelete
  6. சத்தியமா ரொம்ப நல்லா இருக்குங்க .. தொடர்ந்து கலக்குங்க ..!! நான் இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ..!! இதோ என்னோட சாட் status ல வைக்கிறேங்க.. கூடவே என்னோட நண்பர்களையும் வர சொல்லுறேன் ..!!

    ReplyDelete
  7. அய்யய்யோ தாங்க முடியலிங்க வயிறு வலிக்கும்போல மூச்சு வாங்க சிரிச்சேன்! வாவ் அற்புதம்!

    ReplyDelete
  8. நல்ல இருக்குங்க .தம்பி செல்வா தன இந்த லிங்க் தந்தான் அருமை .சிறுச்சி வயிறு வலிக்குது ............முடியல

    ReplyDelete
  9. நல்லது.. தொடர்ந்து வாருங்கள் பாபு பழகுவோம்..நன்றி

    ReplyDelete
  10. பழகுறது சரிங்க ..
    முதல்ல Word Verification எடுத்து விடுங்க .. கமெண்ட் போடா கஷ்டமா இருக்கு ..!!

    ReplyDelete
  11. மன்னிக்கவும் செல்வகுமார், நான் இந்த வலைபூவுக்கு புதியவன் Word Verification எப்படி எடுப்பது என்று சொல்லவும்..

    ReplyDelete
  12. word verification எடுக்கும் முறை:
    பிளாக் dashboardக்கு சென்றவுடன் designஐ கிளிக் செய்யவும். அதில் comments என்பதை கிளிக் செய்யவும். அதில் Show word verification for comments? என்பதற்கு No கொடுத்தால் போதும்.

    நானும் செல்வா சொல்லித்தான் வந்தேன்!!

    ReplyDelete
  13. //மன்னிக்கவும் செல்வகுமார், //

    க் போட மறந்துட்டீங்க ..
    அதனால் செல்வா அப்படின்னே சொல்லுங்க ..!!

    ReplyDelete
  14. // Word Verification எப்படி எடுப்பது என்று சொல்லவும்.. //

    Word Verification னை எடுத்து விட்டேன். கருத்துக்கு நன்றி செல்வா மற்றும் எஸ் கே. குற்றம் குறைகள் இருந்தால் கூறவும்

    ReplyDelete
  15. அட மிக அருமைங்க நண்பரே..!!
    //மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்//.
    செமையான பல்பு நிறைந்த பஞ்ச்...
    பகிர்வுக்கு நன்றி..!!
    செல்வாவுக்கு ஒரு ஜே இது போன்று நகைச்சுவைமிக்க பதிவுகளை நண்பர்களிடம் சாட்ல இணைப்பு கொடுத்து பகிர்ந்தமைக்கு..!!

    ReplyDelete
  16. அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’////

    அப்போ அதுக்கும் போன வாரம் வந்தவரா இருப்பார்

    ReplyDelete
  17. சார் சார் செல்வா சொன்னாறு சார் இங்க ஒருத்தர் காமெடி பண்றாரு சொல்லி.. ரொம்ப நல்லா இருக்கு சார்.... :))

    ReplyDelete
  18. சூப்பரா இருக்கு தமிழ் உங்க தமிழ்... கலக்கி எடுத்துட்டீங்க...

    என்னை மிகவும் கவர்ந்த சில வரிகள்...

    // மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான் //
    // ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன் //
    // ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
    அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது //
    நியாயப்படி எல்லா வரிகளையுமே குறிப்பிட வேண்டும்... ஆனால் பின்னூட்டப் பெட்டி போதவில்லை...

    ReplyDelete
  19. அண்ணா சூப்பர் நா..

    ReplyDelete