Saturday, September 18, 2010
தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாரா பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு.
பிரபல இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமை கழகம் (சர்வ தேச அமைப்பு) மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளருமான கல்பனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடிகர் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.ரம்லத்தை புறக்கணித்து இப்போது அவர் நயன்தாராவுடன் சுற்றுகிறார். மும்பையில் அளித்த பேட்டியில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன். அவர் எனக்காக பிறந்தவர். விசேஷ மானவர் அவரை பிரிந்து என்னால் வாழ முடியாது. பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை சோலை வனமாக மாற்றினார் என்றெல்லாம் வர்ணித்துள்ளார். ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரின் இத்தகைய வார்த்தைகள் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.நயன்தாராவை திருமணம் செய்வது தனிப்பட்ட விஷயம் என்கிறார். தனது மனைவியை துன்புறுத்தி இன்னொரு பெண்ணை மணப்பது அவருக்கு வேண்டுமானால் தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். இது பெண்களுக்கு எதிரான ஒரு பொது பிரச்சினை. பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.பிரபுதேவா- தனது மனைவியை துன்புறுத்தி நயன்தாராவை மணந்தால் இருவரது படத்தையும் தமிழக பெண்கள் புறக்கணிப்பார்கள். ரம்லத்துக்கு எதிராக நடைபெறும் அநிதியை தடுத்து நிறுத்த போராட்டத்தில் குதிப்போம். பிரபுதேவாவிடம் இது பற்றி நடிகர் சங்கம் விசாரித்து ரம்லத்துக்கு நீதி கிடைக்க வழி வகை காண வேண்டும். இல்லாவிட்டால் நடிகர் சங்கம் முன்பும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.நயன்தாராவுக்கும் பெண்கள் சங்கம் மூலம் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறோம். இனனொரு பெண்ணின் வாழ்க்கையில் புகுந்து அந்த குடும்பத்தை சீரழித்தால் சும்மா விடமாட்டோம். சென்னையில் எந்த விழாவுக்கு சென்றாலும் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம். தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாராவை கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment