Monday, September 27, 2010

இதுதாண்டா மெகா சீரியல்


கிட்ட தட்ட இது ஒரு தொற்று வியாதி
எப்போதும் உங்களை ஒரு பரபரப்புலேயே வச்சிட்டு இருப்பாங்க...
எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் புரியும்,
பார்த்தா கண்டிப்பா  அழுகை வரணும்

பயங்கரமான ஒரு டர்னிங் பாயிண்ட்ல தொடரும் போட்டு உங்கள பிரசர் ஏத்துவாங்க.. நீங்களும் அதே பரபரப்புல இருந்துட்டு அடுத்த நாள் பார்க்கும் போது... அந்த டர்னிங் பாயிண்ட் ஒரு முட்டுச்சந்து மாதிரி புஸ்ஸுன்னு போய்டும்..( ஆனா இதுக்காக நீங்க உங்க வீட்டுல டென்சன் ஆகவே இருந்து இருந்து வீடே  ரணகளம் ஆயிருக்கும்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகள் உங்க வீட்ல நடந்ததா... இல்ல அந்த சீரியல்ல நடந்ததானு  உங்களுக்கே தெரியாது..

சினிமால கூட நீங்க பார்க்காத வில்லத்தனம் எல்லாம் இருக்கும்

எதுவுமே நம்புற மாதிரி இருக்காது... ஆனா நம்பித்தான் ஆகணும்

கிட்டத்தட்ட ஏதாவது ஒரு ஸீன் எல்லா சீரியல்லயும் வரும்...

முதல் தலைமுறையில் ஆரம்பிச்சு மூன்றாவது தலைமுறையில் முடியும். ஆனா அதுக்கப்புறமும் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் வேற பேருல...
ஆரம்பத்துல இருந்த கதைக்கும் முடிவுல இருந்த கதைக்கும் சம்பந்தமே இருக்காது, அதனால அடுத்த தலைமுறைக்கு  கதை புரியறதுல சிரமம் இருக்காது

பணக்கார வில்லன் / வில்லி  கெட்டவங்களாவும்   ஏழை ஹீரோயின் நல்லவளவும் இருப்பாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இருக்காது. அழுவதற்கென்றே சில கேரக்டர்ஸ் இருப்பாங்க..

பி.கு: இந்த மெகா சீரியல் பார்க்கிறதுல ஒரே ஒரு நன்மை என்னன்னா  நீங்க வாட்ச்சே பார்க்காம கரெக்டா டைம் சொல்லுவீங்க...

2 comments:

  1. தமிழ் செல்வன் எத்தனை சீரியல் பார்த்து இந்த உண்மைகளை கண்டு பிடிச்சிங்க..

    ReplyDelete
  2. அதிலும் நீங்க கடைசியா சொன்ன பலன் வாட்சே பாக்காம டைம் சொல்ல முடியுங்கறது..

    ReplyDelete